Loading...

Friday, May 28, 2010

நீயே முடிவு செய்...............


நட்பு ஒரு வான்வெளி
காதல் ஒரு தங்கக்கூடு
வான்வெலில் சுதந்திரமாக பறக்கும்
பறவையாக நினைக்கிறாயா
இல்லை
கூண்டுக்குள் அடைபட்டிருக்கும்
கிளியாக விரும்புகிறாயா

நட்பு ஆழ்கடல் போன்றது
காதல் மீன் தொட்டி போன்றது
நீ ஆழ்கடலில் ஆனந்தமாக நீந்தும்
மீனாக விரும்புகிறாயா
இல்லை
மீன்தொட்டிக்குள் சுற்றி வரும்
மீனாக விரும்புகிறாயா

நட்பு எங்கும் வியாபித்திருக்கும்
காற்றை போன்றது
காதல் பலூனுக்குள் அடைபட்டிருக்கும்
காற்றை போன்றது
நீ சுதந்திர காற்றை
சுவாசிக்க விரும்புகிறாயா
இல்லை
அடிமை காற்றை
சுவாசிக்க விரும்புகிறாயா
நீயே முடிவு செய்துகொள்

No comments:

Post a Comment