Loading...

Friday, March 5, 2010

உன் கண்ணில் கண்ணீராக


உன் கண்ணில்
ஒரு துளி கண்ணீராக
நான் இருந்தால்
உன் கன்னம் தழுவி
உன் உதட்டை
சென்று அடைந்திருப்பேன்
என் கண்ணில்
கண்ணீராக நீ இருந்தால்
நான் என்றும் அழ மாட்டேன்
என் கண்ணில் இருந்து உன்னை
கீழே விழ விடமாட்டேன்

உன் சுவாசக் காற்றாய்
நான் இருந்தால்
உன் சுவாசமாக
உன் உள்ளே என்றும்
உன்னுடன் கலந்திருப்பேன்
என் சுவாசக் காற்றாய்
நீ இருந்தால்
உள் இழுத்த மூச்சை
வெள்ளியில் விட மாட்டேன்
வெளியே விட்டு
உன்னை தொலைக்க மாட்டேன்

அம்மா


அம்மா............................... Cry Cry Cry.
உன்னை அம்மா என்று உச்சரிக்கும் போதெல்லாம்
எனக்குள் பாச நதி
அருவியாய் அவதாரமெடுக்கிறது.

மழலைப் பருவத்தின்
விளையாட்டுக் காயங்களுக்காய்
விழிகளில் விளக்கெரித்து
என்
படுக்கைக்குக் காவலிருந்தாய்.

பசி என்னும் வார்த்தை கூட
நான் கேட்டதில்லை
நீ
பசியை உண்டு வாழ்ந்திருக்கிறாய் .

என் புத்தகச் சுமை
முதுகை அழுத்தி அழுதபோது
செருப்பில்லாத பாதங்களேடு
இடுப்பில் என்னை
இரண்டரை மைல் சுமந்திருக்கிறாய்.

அகரம் அறிமுகமான ஆரம்ப நாட்களில்
அன்பின் அகராதியை எனக்கு
அறிமுகப் படுத்தியது
என் தலை கோதிய உன் விரல்களல்லவா ?

எனது சிறு சிறு வெற்றிகளுக்கு
கோப்பைகள் கொடுத்தது
உனது
இதயத் தழுவலும்
பெருமைப் புன்னகையுமல்லவா ?

வேலை தேடும் வேட்டையில்
நகர நெரிசல்களில் கீறல் பட்ட போது
ஆறுதல் கரமானது
உனது ஆறுவரிக் கடிதமல்லவா ?

எனக்கு வேலை கிடைத்தபோது
நான் வெறுமனே மகிழ்ந்தேன்
நீதானே அம்மா
புதிதாய்ப் பிறந்தாய் ?

உனக்கு முதல் சம்பளத்தில்
வாங்கித்தந்த ஒரு புடவையை
விழிகளின் ஈரம் மறைக்க
கண்களில் ஒற்றிக் கொண்டாயே
நினைவிருக்கிறதா ?

இப்போதெல்லாம்
என் கடிதம் காத்து
தொலை பேசியின் ஒலிகாத்து
வாரமிருமுறை
போதிமரப் புத்தனாகிறாய்
வீட்டுத் திண்ணையில்.

எனக்கும்
உன் அருகாமை இல்லாதபோது
காற்றில்லா ஓர் வேற்றுக் கிரகத்துள்
நுழைந்த வெறுமை.

போலியில்லா உன்முகம் பார்த்து
உன் மடியில் தலைசாய்த்து
என் தலை கோதும் விரல்களோடு
வாழத்தான் பிடித்திருக்கிறது எனக்கும்

இந்த
வாழ்க்கை நிர்ப்பந்தங்கள் தான்
வலுக்கட்டாயமாய்
என் சிறகுகளைப் பிடுங்கி
வெள்ளையடிக்கின்றன.

பாருங்க பாருங்க

மூடநம்பிக்கையின் உச்சம்!


இந்த செய்தியை பார்த்தவுடன் ஒரு கணம் அப்படியே ஆடி போய்விட்டேன். ஒரு கைக்குழந்தையின் மேல் ஒரு ஆசாமி நின்று கொண்டிருக்கிறார். இந்த கொடுமை நடந்தது பீகார் மாநிலத்தில் உள்ள கதிஹார் என்ற ஊரில். அந்த ஊரில் உள்ள ஒரு சாமியார் தன்னிடம் அபார சக்தி இருப்பதாகவும் அதன் மூலம் எல்லா வியாதிகளையும் குணப்படுத்துவேன் என்று அப்பாவி மக்களை ஏமாற்றி வந்துள்ளான். அந்த கிராம மக்களும் அந்த சாமியாருக்கு சக்தி இருப்பதாகவும் அந்த சக்தி அவன் கால்கள் மூலமாக வெளிப்படுவதாக நம்புகிறார்கள்.

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்குபெற்ற பீகார் மாநில சுகாதார துறை அமைச்சர் இந்த பிரச்சனையில் கலாச்சாரமும் (இது என்ன கலாச்சாரமோ?) மதமும் சம்பந்த பட்டிருப்பதால் இந்த சாமியார் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று கூறியுள்ளார். இதை விட கொடுமை கதிஹார் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் நிகில் சௌதிரி (பி.ஜே.பி) இப்படி கூறியிருக்கிறார் ”இந்த சடங்கினால் மக்கள் பலன் அடைவார்களே ஆனால், இது அவர்களின் உரிமை, அதை யாரும் தடுக்க முடியாது.” அது மட்டும் இல்லாமல் எந்த விதமான தயக்கமும் இன்றி இந்த காட்டுமிராண்டி தனத்தை நியாப்படுத்தி உள்ளார். இவர் மட்டும் அல்லாமல் அதே தொலைகாட்சி நிகழ்ச்சியில் பங்குபெற்ற காசி சுமேரு மடத்தின் தலைவர் சங்கராச்சரிய சுவாமியும் அவருக்கு ஒத்து ஊதியுள்ளார். சனல் எடமரக்கு அவர்கள் அவரிடம் இந்த காட்டுமிராண்டி தனத்தை தடுத்து நிறுத்துமாறு அந்த நிகழ்ச்சியில் வலியுறுத்தியுள்ளார்.

இந்த காட்டுமிராண்டி தனம் ஒளிபரப்பான 24 மணி நேரத்திற்குள் அந்த காட்டுமிராண்டி சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார்

Thursday, March 4, 2010

இது தான் காதலா?


உன் பெயரை
யார் உச்சரித்தாலும்
சட்டென்று திரும்பி விடுகிறது..!
என் மனது…ஏன்...?
ஓ…இது தான் காதலா?